fbpx
Others

திருப்பத்தூர்–சவால்விடும் வாணியம்பாடி சார்பதிவாளர்…..?

திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு லஞ்சத்துறை அல்ல அமலாக்கத் துறையே வந்தாலும் சமாளிப்பேன், சார் பதிவாளர் யாகியாகான்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியானது தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும் இங்கு தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இதனால் இந்த பகுதியானது எப்பொழுதும் வெளி மாநிலத்தவர், வெளிநாட்டு தொழிலதிபர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்வதால் அவர்கள் இங்கே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுஇதனால் அவர்கள் இந்தபகுதியிலேயே கட்டிய வீடுகளை வாங்குவதும் சொந்தமாக இடங்களை வாங்கி வீடு கட்டி இங்கே தங்கி வியாபாரம் செய்கின்றனர், இதன் காரணமாக இப்பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபாரம்அதி வேகமாக வளர்கிறது, இதனால் இங்குள்ள பத்திர பதிவு அலுவலகம் எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிறைந்துகாணப்படும்,மாவட்டத்திலேயேஇந்தஅலுவலகத்தில்மட்டும்அதிகமானபத்திரங்கள்  பதிவுய்யப்படுகின்றன,இங்குசார்பதிவாளராக பணிபுரிந்து வருபவர் யாகியாகான்இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவர் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் பெறுவதற்காக ரூ,50 லட்சம் லஞ்சம்கொடுத்து பணி ஆணை பெற்று வந்தார் என்று அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் கூறுகின்றனர்,இவர் பணி மாறுதலுக்கு லஞ்சமாக கொடுத்த பணத்திற்கு பல மடங்கு சம்பாதிக்க பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல்1 லட்சம் வரைசம்பாதிக்கிறார், எந்த வகையில் சம்பாதிக்கிறார் என்றால் அலுவலகத்திற்கு வரும் பத்திரங்களையும் பலமுறை ஆராய்ந்து அதில் உள்ள சிறிய தவறுகளை கண்டறிந்து அவற்றுக்கு ஏற்றார் போல் பேரம் பேசுவதில் கைதேர்ந்தவர், அது மட்டுமல்லாமல் ஒரு ஏக்கரில்5 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்ய20ஆயிரம் முதல்50 ஆயிரம் வரை வாங்குவது,10 சென்ட் முதல்20 சென்ட் நிலத்தைப் பிரித்து பத்திர பதிவு செய்ய 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு கையெழுத்து போடுகிறார், அதுமட்டுமின்றி பதிவிற்கு தேவையான டாக்குமெண்ட்டுகள் ஒரு சில இல்லையென்றாலும் அதற்கு ஒரு ரேட், வாரிசு சான்று இல்லையென்றால் அதற்கு ஒரு ரேட், இப்படி பலவகையில் லஞ்சமாக தினமும்50 ஆயிரம் முதல்1 லட்சம் ரூபாயை தன் பங்கிற்கு வீட்டிற்கு செல்லும்போது எடுத்துச் செல்கிறார் இன்று அலுவலக ஊழியர்கள் இவர் மீது அளவற்ற புகார்கள் எழுப்புகின்றனர், இவர் வாங்கும் லஞ்ச பணத்தில் அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு எறும்புக்கு போடும் தீனியை போல சிறிதளவு கொடுத்து விட்டு பெரும் பணத்தைவீட்டிற்கு எடுத்துச் சென்று விடுகிறார் என்று சக ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள், அது மட்டுமல்லாமல் பதிவு செய்ய வரும் பெரும்பாலான பத்திரங்களை கள ஆய்வு என்று கூறி தாமதப்படுத்தி ஆய்வுக்குச் செல்லும் இடங்களை இட உரிமையாளர்களிடம் இந்த இடத்தில் ஆவணங்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன என்று கூறி எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு கவனிக்க வேண்டும் என்று கூறி ரேட் பேசி அவர் கேட்கும் பணத்தை கொடுத்தால் பதிவேற்றம் செய்கிறார் தான் பேசிய ரேட் படியவில்லை என்றால் புரோக்கர்களின் மூலம் காய் நகர்த்தி கச்சிதமாக வேலை முடிப்பார் இதனால் இந்த அலுவலகத்தில் புரோக்கர்கள் எப்பொழுதும் அவர் உட்காரும் மேஜை சுற்றி நின்று கொண்டே இருப்பார்கள், பெண் புரோக்கர்களை பார்த்தாள் இவரது கண் பாவனை வித்தியாசமாகவும், வார்த்தைகள் வேறுபட்டு இரண்டு அர்த்தங்கள் கொண்டவைகளாக பேசுவாராம்,இவர் பல லட்சங்களை கொடுத்து பணி ஆணை வாங்கி வந்து1 வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்போது அதைவிட பல மடங்கு சொத்துக்களை அவர்கள் உறவினர்களின் பெயரில் வாங்கி குவித்துள்ளார், இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வந்ததின் பேரில் கடந்த10-6-2024 அன்று மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர், சோதனையில் கணக்கில் வராத ரூபாய்60 ஆயிரம் கைப்பற்றப்பட்டது, அவைலஞ்சமாகபெறப்பட்டதுஎன்றுகூறுகிறார்கள்அன்று ஒரு நாள் மட்டும் வாங்கிய லஞ்சம் இவ்வளவு என்றால் மற்ற நாட்களில் எவ்வளவு லஞ்சம் பெறுவார், இதன் மூலம் மாதத்திற்கு, வருடத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பார் இன்று பொதுமக்கள் வினாத்தொடுக்கின்றனர், தினமும்இவர் பி னாமிகளின் வங்கிக் கணக்குகளிலும் புரோக்கர்களின் மூலமாகவும் உறவினர்களை வரவழைத்து அவர்கள் மூலமாகவும்பெரும் தொகை பரிமாறப்படுகிறது எனஅலுவலக ஊழியர்கள்இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறுகின்றனர், இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் துறையின் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பினாலும் அதிகாரிகள் இதுவரை இவர் மீது எந்தவிசாரணை மேற்கொள்ளவில்லை, இப்பொழுதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது பார்வையை திருப்பி உள்ளது, விரைவில் அமலாக்க துறையின் பார்வை திரும்பலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் அலுவலகத்தில் கைப்பற்ற பணத்தை பற்றி பத்திரிக்கையாளர்கள் உங்களிடம் லஞ்சஒழிப்புத்துறை ரூ 60 ஆயிரம் கைப்பற்றியுள்ளது அந்த பணம் யாருடையது லஞ்சமாக பெறப்பட்டதா என கேள்வி கேட்டனர் அதற்கு உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெனாவட்டலாக ஆமாம் எனபதில் சொல்கிறார், இது மட்டுமல்ல அமுலாக்க துறையே வந்தாலும் எல்லா அதிகாரிகளையும் என்னால் சமாளிக்க முடியும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அடித்து கூறுகிறராம்,எனவே மாநில பத்திர பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் பிரகாஷ் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டால் இவருடைய வெட்ட வெளிச்சம் காற்றில் பறக்கும் என்பது ஐயமில்லை பார்ப்போம்.!

Related Articles

Back to top button
Close
Close