Others
பாடியநல்லூரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயசிறப்பு செய்தி….

பாடியநல்லூரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் தங்க குடை ஏற்றுதல் நிகழ்ச்சிநடந்தது! திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அமைந்துள்ள இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் இன்று தங்க குடை ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இங்குள்ள புத்த வழிபாட்டு மண்டபம் சீரமைக்கப்பட்டு தங்கக்குடை ஏற்றி வைக்கப்பட்டது.பௌத்த துறவிகள்மந்திரங்களை ஓதி சிறப்பித்தனர்.பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் தெளிப்பு பாரம்பரியமுறைப்படி நடைபெற்றது .பக்தர்கள் பணத்தையும் காணிக்கைகளையும் ஆர்வமுடன் கைகளில் பிடித்துக்
கொண்டு சென்றனர்.செங்குன்றம், காவாங்கரை, நல்லூர், புழல் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுபுத்தரை தரிசனம்செய்தனர்.

