fbpx
Others

வீரபாண்டி பைபாஸ் சாலையில் பயங்கர விபத்து…?

தேனி மாவட்டம் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில்போடந்திரபுரம் விலக்கு பகுதியில் வேல்முருகன் தனியார் பேருந்து மதுரைஇருந்துகம்பம்நோக்கிசென்றுகொண்டிருந்தது.இரண்டு சக்கர வாகனத்தில் மீது தனியார் பேருந்து மோதியதால் தீப்பற்றி எரிந்தது.உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகளை உடனுக்குடன் வேறு ஒரு தனியார் பேருந்தில் ஏற்றப்பட்டு உயிருக்கு பயந்து தப்பிச் சென்றனர்.இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கூழையனூர் அய்யனார் புறத்தை சேர்ந்த அரசாங்கம் (57) என்பவர் முற்றிலும் பேருந்து அடியில்தீப்பற்றி எரிந்து உடல் கருகி இறந்துவிட்டார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்பயணிகள் கூறுகையில் தனியார் பேருந்து அதிவேகமாக செல்வதும் முறையான பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் பைபாஸில் செல்வதும் நடைபெற்று வருவதும் இதுபோன்று சம்பவம் வராமல் தடுக்க முறையான நிறுத்தத்தில் மற்றும் முறையான வழித்தடங்களில் செல்லவும் வேண்டுகோள் வைத்தனர்.வீரபாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…..
 சிறப்பு நிருபர்நேசதேசன் ஜெ. ஹரி ஹரன்

Related Articles

Back to top button
Close
Close