fbpx
Others

பள்ளிக்கரணை–சென்னை மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி..

தமிழ்நாடு சிலம்பம் பேரவை அமைப்பில் இணைந்துள்ள சென்னை மாவட்டம் சிலம்பம் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வேளச்சேரி பகுதியில் உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீ நீலாம்பாள் மஹால் வளாகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஜெ ஈசன் தலைமை தாங்கினார்.
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். ஆர். முருகக்கனி ஆசான், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி செயலாளர். எஸ். ஜி. சூர்யா ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில சிலம்பம் பேரவை தலைவர். சந்தோஷ், மாவட்ட பேரவை கவுரவ தலைவர். நந்தா, மாவட்ட பா.ஜ.க தலைவர். சாய் சத்யன், கவுன்சிலர்கள் லியோ சுந்தரம், சிவப்பிரகாசம் மற்றும் ஆர். சூர்ய பிரபா, கே. கீதா, சிவாஜி எம். பிரகாஷ் ராஜ் இவர்களுடன் மாநில நிர்வாகிகளான நாஞ்சில். எம். சுரேஷ் சண்முக பிரியா, நந்தகுமார், கஜேந்திரன் ராஜேந்திரன் மாவட்ட பா.ஜ.க செயலாளர் பள்ளிக்கரணை மண்டல பாஜக செயலாளர்.எஸ். லதா,செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சுமார் 200 மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் சிவகங்கையில் நடைபெறும் மாநில போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று மாநில தலைவர்.ஜெ. ஈசன் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close