fbpx
Others

அரசு கல்லூரி கழிவறையில்நெளிந்த நாகப்பாம்புகுட்டிகள் ?

கழிவறையில் நெளிந்த நாகப்பாம்பு குட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியில் இரண்டு சிஃப்ட்டாக சுமார் எட்டாயிரம் மாணவ – மாணவிகள் பயில்கின்றனர். ஒரு நேரத்தில் ஏறக்குறைய 4,500 மாணவிகள் படிக்கிற சூழலில் அவர்களுக்கானகழிவறைகள்பராமரிக்கப்படாமல்,அலட்சியமாகவிடப்பட்டிருக்கிறது. இதுநாள் வரை தூய்மைப் பணியே மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர் மாணவிகள். கழிவறைகளைச் சுற்றிலும் செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து புதர்மண்டியும் காணப்படுகிறது. இதனால், `நாகத்தீவா…’ என்று அச்சப்பட்டு கழிவறைப் பகுதிக்கே செல்லாத முடியாத வகையில்பாம்புகள்நடமாட்டமும்,இனப்பெருக்கமும்அதிகமாகியிருக்கிறது.ஆனாலும், இயற்கை உபாதைகளைக் கழிக்க மாணவிகள் வேறு எங்கேயும் செல்ல முடியாது என்பதால், அச்சப்பட்டுக்கொண்டே இந்தக் கழிவறைப் பகுதிக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கழிவறைக்குச் சென்ற மாணவிகள் அதிர்ச்சிக்குள்ளாகி நடுநடுங்கியிருக்கிறார்கள். கழிவறையில் கொத்துக்கொத்தாக பாம்புக்குட்டிகள் நெளிந்துகொண்டிருந்தது. இந்தக் காட்சிகளை பார்த்து நடுநடுங்கிப்போன மாணவிகள் அலறியடித்துக்கொண்டு கழிவறையில் இருந்து வெளியே ஓடி வந்திருக்கின்றனர்.இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். உடனடியாக கழிவறையை இழுத்து மூடி கதவின் வெளிப்புறத்தில் `இங்கு நிறையப் பாம்புகள் உள்ளன. உள்ளே செல்ல வேண்டாம்’ என்று லெட்டரில் எழுதி ஒட்டியிருக்கின்றனர். இதையடுத்து, செய்யாறு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கழிவறையில் நெளிந்துகொண்டிருந்த மூன்று பாம்புகளைப் பிடித்துசென்று வனப்பகுதியில் விட்டிருக்கின்றனர். மேலும் சிலப் பாம்புக்குட்டிகள் கழிவறை பைப்களுக்குள் பதுங்கிகொண்டன.  செய்யாறு அரசுக் கலைக்கல்லூரி

செய்யாறு அரசுக் கலைக்கல்லூரி

தீயணைப்பு வீரர்கள் சென்ற பிறகு நாடோடி சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபர்களை அழைத்துவந்து மற்ற பாம்புகளையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களிடமும் நான்கு பாம்புக்குட்டிகள்தான் பிடிபட்டது. இவை அனைத்துமே கொடிய விஷத்தன்மைகொண்ட நாகப்பாம்பு குட்டிகள் எனத் தெரியவந்திருக்கிறது. கடந்த இரண்டு நாள்கள் முயற்சியில் மொத்தமாக ஏழு பாம்பு குட்டிகள் பிடிபட்டுள்ள நிலையில், மீதி என்னவானது என்ற கேள்வியும் மாணவிகளிடம் எழுந்திருக்கிறது. எனவே, “பாம்பு குட்டிகளுடன் இனப்பெருக்கத்துக்குக் காரணமான பெரிய பாம்புகளையும் தேடிப் பிடித்துசெல்ல வேண்டும். கழிவறையைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றி தூய்மையாக பராமரித்து, பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்’’ என்று விலகாத பீதியோடு கோரிக்கை விடுத்திருக்கின்றனர் மாணவிகள்.

Related Articles

Back to top button
Close
Close