நீடாமங்கலம்–பெரம்பூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் வழங்கல்..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பூர் ஊராட்சியில் நூறுநாள் வேலைதிட்டத்திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.பெரம்பூர் ஊராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்காக நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் தேக்கு மரங்கள் வழங்கப்பட்டு அதனை நட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் தேக்கு மரக்கன்றுகள் பெரம்பூர் ஊராட்சி பகுதியில் வழங்கப்பட்டது. மேலும் அதிக அளவில் மரக்கன்றுகள் வளர்க்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பல்நோக்கு சேவை இயக்கம் ஈடுபட்டு நிழல் தரும் மரங்கள் ,பழம் தரும் மரங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாக்கும் மரக்கன்றுகளை தொடர்ந்து வழங்கி வளர்த்து பாதுகாத்து வருகின்றனர்.. மேலும் அரசின் பனை மரம் வளர்ப்பு திட்டத்தில் இணைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்ப்பதற்கு தங்களால் இயன்ற அளவு முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் இவர்களது முயற்சிகளை பாராட்டி அவர்களும் மரக்கன்றுகள் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் இத்தகைய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் வேண்டுகோளும் விழிப்புணர்வும் செய்யப்பட்டுள்ளது.