fbpx
Others

மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை எட்டியது…?

உத்தரவுகளை செயல்படுத்த மறுக்கும் கர்நாடகாகாவிரியில்தண்ணீர்திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேதொடர் பிரச்னை நீடித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பதுதான் இதற்கு முழு காரணமும்.இதனைமுடிவுக்கு கொண்டு வரவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.காவிரி ஆணையம் போடும் உத்தரவுகளை மதிக்காமல் கர்நாடகா செயல்பட்டு வருகிறது. கடந்த 11ஆம் தேதி கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க பரிந்துரைத்தது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடகா, வேண்டுமானால் வினாடிக்கு 8000 கன அடி திறந்துவிடப்படும் என்று அறிவித்தது.
DK Shivakumar Urge TN Govt

தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி பிரச்னை தற்போது மீண்டும் பூதாகரமாகி உள்ளது. அண்மையில் நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதனை கர்நாடகம் ஏற்கவில்லை.காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது. அதில், ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது போல தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது, வினாடிக்கு 8500 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று கைவிரித்தது. அத்துடன், ஒழுங்காற்றுக் குழு முடிவை எதிர்த்து ஆணையத்தில் முறையிடவும் முடிவு எடுக்கப்பட்டதாக கர்நாடகா தெரிவித்தது.கடந்த சில வாரங்களில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆனால், தங்களுக்கு மழைப் பொழிவு குறைவாக உள்ளது எனக் கூறி கர்நாடகா தண்ணீர் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.இந்த சூழலில் கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டிற்கு எனது ஒரே வேண்டுகோள் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவதற்குஅனுமதிக்கவேண்டும்என்பதுதான்.இந்த மேகதாது அணையானது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என இரு மாநிலங்களுக்கும் சமமாக பயனளிக்கும்” என்று தெரிவித்தார்.இரு மாநிலங்களும் செழிப்பு அடைய மேகதாது அணை கட்ட வேண்டியது அவசியம் என்ற டி.கே.சிவக்குமார், “ஆகவே, தமிழ்நாடு அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மேகதாதுவின் கட்டுமானத்திற்கு பச்சைக்கொடி காட்ட வேண்டும். இப்பகுதியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் பங்களிப்பை தமிழகம் வழங்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close