fbpx
Others

அதிமுக உண்ணாவிரதம்–பிரேமலதாஅதிரடி என்ட்ரி..!

Premalatha Vijayakanth

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணங்கள் தொடர்பாக திமுக அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் போதுச்செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கறுப்புச்சட்டை அணிந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி சம்பவம் திமுகவினர் உதவியுடன் நடப்பதாக கூறுகிறார்கள். உண்மை நிலை என்ன என்பது சிபிஐ விசாரணையில் தான் தெரிய வரும். அப்போதுதான் அவர்கள் முகத்திரை கிழியும் என்றார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கருணாபுரம் பகுதியில் திரும்பும் பக்கமெல்லாம் மரண ஓலமாக உள்ளது. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசை சரமாரியாக விளாசினார்..

Related Articles

Back to top button
Close
Close