fbpx
Others

பயனாளிகளுக்குவிலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது- புழல் ஒன்றியம்

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை அம்பத்தூர் கோட்டம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைப் பெண்கள் கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு 100% மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது.  விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் கலந்து கொண்டு புழல் ஒன்றியத்தில் உள்ள விளாங்காடுபாக்கம்,தீர்த்தக்கரையம்பட்டு, புள்ளிலைன், வடகரை, அழிஞ்சிவாக்கம், கிரான்ட் லைன் சென்றம்பாக்கம் ஆகிய 7ஊராட்சிகளில் உள்ள 100 பயனாளிகளுக்கு தலா ஐந்து வெள்ளாடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்.எம்.ராஜேந்திரன், புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன், செங்குன்றம் நகர செயலாளர் ஜி ராஜேந்திரன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கரன், சென்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் என்.ராமு புள்ளிலைன் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் தமிழரசி குமார், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலாவதி நந்தகுமார், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி துணைத்தலைவர் விப்ர நாராயணன், புழல் ஒன்றிய கழக நிர்வாகிகள் அவைத் தலைவர் செல்வமணி, துணை செயலாளர்கள் எம்.அண்ணாதுரை, ராஜேஸ்வரி எத்திராஜ், முருகன், பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் அற்புதராஜ், டி.ரமேஷ், முன்னாள் தலைவர் ஏழுமலை, மா.மணி கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் பி.சேனாதிபதி டாக்டர் டி.சுரேஷ் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close