Others

காங்கிரஸ்கட்சி அரசியலமைப்பு பாதுகாப்பு பேரணி …..

இந்திய தேசிய காங்கிரசு - தமிழ் விக்கிப்பீடியாகாங்கிரஸ்கட்சிஅமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்கு திருட்டு குறித்த ஆவண ஆதாரங்களை நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி அளித்துள்ளார். ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிர முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து ஒரு சுதந்திரமானவிசாரணைக்குஉத்தரவிடுவதற்குப் பதிலாக, இந்திய தேர்தல் ஆணையம் இந்த ஆதாரங்களை புறக்கணித்தது. எதிர்க்கட்சித் தலைவரிடமே பிரமாணப் பத்திரங்களைக் கோரியது. மேலும், கேட்ட தகவல்களை வழங்க புலனாய்வு அமைப்புகள் மறுத்துவிட்டன.பிஹார் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்பு தீவிர ஆய்வுப் பணியை தொடங்கியது. இதன் இரண்டாம் கட்டத்தில், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மூன்றாம் கட்டத்தில் 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்துவதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் இது குடிமக்கள் தாங்கள் அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.பிஹாரின் வரைவு வாக்காளர் பட்டியலில் மட்டும் 65 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டன. மூன்று கட்டங்களிலும் நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 13 கோடியை தாண்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் திருமணத்துக்குப் பிறகு வசிப்பிடத்தை மாற்றிய பெண்கள். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கத்தான் மகாத்மா காந்தியும் அம்பேத்கரும் போராடினார்கள். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மை சிதைக்கப்பட்டதாலேயே இவை அனைத்தும் நடந்துள்ளன.இந்திய அரசியலமைப்பின் 324வது பிரிவு, தேர்தல் ஆணையத்தை அரசாங்கத்தின் தலையீடு இல்லாத, ஒரு சுதந்திரமான அரசியலமைப்பு அமைப்பாகவே கருதியது. ஆனால், சட்டத்தில் திருத்தம் செய்யப்படடு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டார். இதன்மூலம், தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில்அரசாங்கத்துக்குமுழுமையானBarakhamba तो झांकी है, Ramlila अभी बाकी है!, Chalo Dilli | 1 November |  Maharally | Munish Tamang | Facebookஅதிகாரம் வழங்கப்பட்டது.மேலும், ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம், தேர்தல் ஆணையர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது செய்யும் செயல்களுக்கு வாழ்நாள் முழுவதும் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இது அரசியலமைப்பு நெறிகளையும் கொள்கைகளையும் மீறிச் செயல்பட அவர்களுக்கு ஒரு தடையற்ற வாய்ப்பை வழங்கியுள்ளது.ஒரு குடிமகனின் வாக்கு திருடப்படும்போது அரசியலமைபபு வழங்கியுள்ளமற்றஅனைத்துஉரிமைகளும்அர்த்தமற்றதாகிவிடுகின்றன. எனவே, இந்த அறப்போராட்டம் ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானது அல்ல. மாறாக, இந்தியதொடர்ந்து ‘மக்களாகிய நாம்’(We,thePeople)என்றஅடிப்படையில்அமைந்தஜனநாயகநாடாகநீடிக்குமாஎன்பதுகுறித்தபோராட்டமாகும்.அரசியலமைப்பு தினமானநவம்பர்26இன்று,அரசியலமைப்பைபாதுகாப்பதற்கான நமது பிரச்சாரத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும் அந்தந்தநிலங்களில்பிரம்மாண்டமான அரசியலமைப்பு பாதுகாப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்யும். மகாத்மா காந்தி அல்லது அம்பேத்கர் சிலைக்கு அருகில் இருந்து இந்த பேரணி தொடங்கும். இதுஅரசியலமைப்பைபாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை பறைசாற்றும்.அரசியலமைப்பை நேசிக்கும் குடிமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் என அனைவரும் இந்த பேரணியில் பெருமளவில் கலந்து கொண்டு, நவம்பர் 26ம் தேதியை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உறுதி ஏற்பு நாளாக மாற்ற வேண்டும். காங்கிரஸ் தலைவர் கார்கே லக்னோவில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க உள்ளார்.’ என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close