Others

மதுரை கலெக்டர் மனப்பூர்வமாக மன்னிப்பு…..

Latest Tamil Newsமதுரை கலெக்டர் தாக்கல் செய்த 16 பக்க நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நவ., 20, 21, 22 ஆகிய தேதிகளில் போலீசார், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தீபம் ஏற்றுவதற்கான வழித்தடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டன.சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க 5,797 போலீசார் மற்றும் 20 நிர்வாக நடுவர்கள் நியமிக்கப்பட்டனர். நவ.,23 இரவு முதல் நவ.,25 காலை வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நவ.,24 மாலை 6:00 முதல் 6:30 மணிக்குள் கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட,10பேர்கொண்டகுழுதீபம்ஏற்றவரவில்லை.அக்குழுவினரின் பெயர்ப் பட்டியலையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.கோவில் நிர்வாகம் அங்கீகரிக்காத நிலையில், மாற்று நபர்களை நியமிக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. ஆகம விதிப்படி வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தீர்மானித்தது. அதன் காரணமாகவே, தீபத்துாணில் தீபம் ஏற்ற முடியவில்லை.நீதிமன்றஉத்தரவைநல்லெண்ணத்துடன்செயல்படுத்தஅனைத்துமுயற்சிகளும்எடுக்கப்பட்டன.வேண்டுமென்றே நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை. இருப்பினும், தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close