தமிழக முழு நேர கவர்னராக, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நியமித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ..

கேரள கவர்னர் பொறுப்பில் இருந்து அர்லேக்கரை நேற்று விடுவித்த ஜனாதிபதி முர்மு, தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமித்து உத்தர விட்டார்.இதே போல், கேரளா, கர்நாடகா, உத்தரகண்ட், ஒடிஷா, சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் கவர்னராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்துார், கேரள கவர்னராகவும், கர்நாடக கவர்னராக டாக்டர் சுதா யாதவ், ஒடிஷா கவர்னராக பிரஜ் மோகன் ராம், உத்தரகண்ட் கவர்னராக டாக்டர் தல் சிங் பிசென், சிக்கிம் கவர்னராக துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிய கவர்னர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்.கர்நாடக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுதா யாதவ், பா.ஜ., முன்னாள் எம்.பி., ஆவார். இதன் மூலம், அம்மாநிலத்தின் இரண்டாவது பெண் கவர்னர் என்ற பெருமையை பெற உள்ளார்.உத்தரகண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தல் சிங் பிசெனும், பா.ஜ., முன்னாள் எம்.பி., ஆவார்.இதே போல், பிரஜ் மோகன் ராம், ஜார்க்கண்டின் பாலமு லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்.பி.,யாக இருந்தவர்.பா.ஜ., முன்னாள் தேசிய பொதுச்செயலராக இருந்த துஷ்யந்த் கவுதம், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமாக இருந்துள்ளார்.