fbpx
Others

மின் மாற்றிகள் சக்தியை இழந்து மின் தடை —அமைச்சர் நிர்மல் குமார்…

பாஜகவுடன் கூட்டணி இல்லை - தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் | தமிழ்நாடு  செய்திகள் (Tamil Nadu News) - News18 Tamilதமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று 29 இடங்களில் ஏற்பட்ட மின் தடையை மின் வாரியம் சீரமைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்க முடியாத துயரத்தில் நள்ளிரவிலும் பொதுமக்கள் சாலைகளுக்கு வந்து போராடிக் கொண்டிருப்பதாகமுன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜிஅறிக்கைவாயிலாககுற்றஞ்சாட்டியிருந்தார். ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள் என்று சொல்லி சிசிடிவி கேமரா வீடியோவை அமைச்சர் நிர்மல் குமார் பதிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள செந்தில் பாலாஜி, பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், நள்ளிரவில் போராடும் மக்களின் துயரை துடைக்கும்வகையில், மின் வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு, டான்ஜெட்கோவின் எக்ஸ் தள பதிவை பகிர்ந்து பதில் அளித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழ்நாட்டில் சனிக்கிழமை 29 இடங்களில் ஏற்பட்ட மின்தடையை மின்வாரியம் சீரமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், பெருவிளை, கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நெல்லை மாவட்டம் ஸ்ரீபுரம் உள்ளிட்ட 29 இடங்களில் மின் தடை ஏற்பட்டதற்கான காரணத்தைக் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அவை குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 17 மணி நேரம் 15 நிமிடங்களில் சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது என்பதையும் அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேனி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “மத அரசியலை தமிழகம் விரும்பாது. தலைவரும் விரும்பமாட்டார். தமிழகத்தில் என்றும் மதத்தை வைத்து அரசியல் செய்ய தமிழக மக்களுக்கும் விரும்ப மாட்டார்கள். எங்கள் தலைவரும் விரும்ப மாட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமான தீர்வை கொண்டுவருவோம். கடந்த திமுக ஆட்சியில் தவறாக கையாண்டதன் விளைவுதான் இந்த பிரச்சனையை இவ்வளவு தூரம் கொண்டுவந்து விட்டிருக்கிறது. மேகதாது விவகாரத்தை திமுக சரியாக கையாளவில்லை.மின்வெட்டு Old Transformers Causing Power Cuts Says Minister CTR Nirmal Kumarபிரச்சனையை தீர்க்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. மின்சார கட்டமைப்பில் 12 ஆண்டு பின்னோக்கி உள்ளது. சீரமைத்து வருகிறோம். 4 நாட்களாக எங்கெல்லாம் மின் தடை என ஆராய சென்னையில் 500 பேர் கொண்ட குழு இரவு முழுவதும் ரோந்து செல்கின்றனர்.கடந்த ஆட்சியில் மின் மாற்றிகள் போன்ற உபகரணங்கள் வாங்கப்படாமல், பழையதை வைத்தே மின்சார விநியோகம் செய்ததால், தற்போது அவை தனது சக்தியை இழந்து மின் தடை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று 29 இடங்களில் ஏற்பட்ட மின் தடையை மின்வாரியம் சீரமைத்துள்ளது. 12 வருடங்களுக்கு முன்பு என்னத் தேவையோ அந்த இடத்தில்தான் தமிழ்நாடு இன்று உள்ளது. இதற்கு முந்தைய ஆட்சிகளில் மின்சார கட்டமைப்புகளை வலுப்படுத்த என்ன வேலை செய்தார்கள் என சொல்லவில்லை. நாங்கள் சொல்வோம். இந்த துறையை பற்றிப் பேச செந்தில் பாலாஜிக்கு எந்தத் தகுதியும் இல்லை. மின்கட்டமைப்பு தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.” என தெரிவித்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close