‘இண்டியா’ கூட்டணிஒற்றுமையாக உள்ளது—ஜெயராம் ரமேஷ்
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மதியம் 12 மணிக்கு தொடங்க உள்ள இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெகவுடன் கூட்டணி சேர்ந்ததால் திமுக இந்த முடிவை எடுத்துள்ளது.இந்நிலையில், இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், “புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நாளை (ஜூன் 8, 2026) மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. சில கட்சிகள் தங்கள் சொந்தக் காரணங்களால் இந்தக் கூட்டத்தில் இணைய இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும்,மோடி அரசின் சில கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் அவை கடுமையாக எதிர்க்கின்றன.குறிப்பாக, லட்சக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்தது, அரசியலமைப்பைத் தொடர்ந்துதாக்கிவருவது,புலனாய்வுஅமைப்புகள்மூலம்எதிர்க்கட்சித்தலைவர்களைக்குறிவைப்பது,கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கச் செய்தது, தொடர் விலைவாசி உயர்வால் குடும்ப பட்ஜெட்டைச்சீர்குலைத்தது,லட்சக்கணக்கானஇளைஞர்களின் நம்பிக்கைகளையும் லட்சியங்களையும்ஏமாற்றியது,முதலீட்டுச்சூழலைபலவீனப்படுத்தியது, வெளியுறவுக் கொள்கை மூலம் தேசிய நலன்களைப் பாதிப்படையச் செய்தது ஆகியவற்றை அவை எதிர்க்கின்றன. இந்தியாவைப் போலவே,’இந்தியா’கூட்டணியும்பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாக நிற்கிறது.” என தெரிவித்துள்ளார்.இந்த கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்க இருக்கிறார். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் இண்டியா கூட்டணியுடன் இணக்கமாக இருப்பது மிகவும் முக்கியம் என அவர் கருதுகிறார். நாளைய கூட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன்,“பொதுவானநோக்கத்துடனும் தெளிவான குறிக்கோளுடனும் இக்கூட்டம் நடைபெறும். ‘இண்டியா’ கூட்டணிஒற்றுமையாக உள்ளது. பல கட்சிகள் தோழமை உணர்வுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆவலுடன் உள்ளன.” என தெரிவித்துள்ளார்.