பல்கலைக்கழகங்களின் வேந்தர் — உயர்கல்வி அமைச்சர்…?
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் அவரது சிலைக்கு பெ.விஸ்வநாதன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:மேகேதாட்டு அணை விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. ஒரு செங்கல்லை கூட கர்நாடக அரசு எடுத்து வைக்கக் கூடாது. அதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். முதல்வரின் கரத்தை வலுப்படுத்த இந்த ஆட்சியை 5 ஆண்டுகள் கொண்டு செல்வதற்கு காங்கிரஸ் இரும்புக் கோட்டையாக அவர் பின்னால் நிற்கும்.உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் தொடர்பாக ஜூன் 3-ம் தேதிக்குள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பேன். மருத்துவம், பொறியியல் தேர்வில் தமிழ் இடம் பெறாதது ‘டெக்னிக்கல்’ காரணம்.தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற திமுக அரசின் நடைமுறையை பின்பற்றும் கட்டாயம் எங்களுக்கு கிடையாது. இதில் தமிழக முதல்வரின் கொள்கை முடிவின்படி செயல்படுவோம்.ஒரு கட்சி எம்எல்ஏ அவரது விருப்பத்துக்கு ஏற்றவாறு பதவியை ராஜினாமா செய்து விட்டு, விரும்பும் கட்சியில் இணைந்து மீண்டும் மக்களை சந்தித்து எம்எல்ஏவாக விரும்புகிறார். இது ஜனநாயகத்தில் விரோதமாகவோ, குதிரை பேரமாகவோ கருதவில்லை.இதனிடையே துணைவேந்தர் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலயில், விளக்கமளித்து விஸ்வநாதன் கூறுகையில், “பல்கலைக் கழகங்களில் வேந்தர்களாக முதலமைச்சர் பொறுப்பேற்பது குறித்து முதல்வர் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார் என்றுதான் கூறினேன்.சில ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மறுக்கிறேன். மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் எனது கருத்து அமைந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்” எனத்உயர்கல்வி அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.