இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறைஅமைச்சர்…..
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவானது. இதனையடுத்து ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகள் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருந்தது. இதனையடுத்துமுதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வன்னி அரசும், முஸ்லிம் லீக் கட்சி சார்பாக ஷாஜகானும் அமைச்சரவையில் இடம்பிடித்தனர்.இன்று காலை பதவியேற்ற நிலையில் அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இந்த நிலையில் யார் இந்த ஷாஜகான் என்பதை தற்போது பார்க்கலாம். ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஆவார். இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை.இவரது துணைவியார் பெயர் ஷமிம் நிஷா, ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி மன்ற 10வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் (1986 – 1989) பி.எஸ்சி பட்டம் பெற்றவர். கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் ஷாஜகான் பணியாற்றி வருகிறார். பல்வேறு பொறுப்புகளை வகித்த ஷாஜகான் தற்போது மாநில செயலாளராக உள்ளார். தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருமங்கலக்குடியில் அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன செயலாளராக கல்வி சேவையாற்றி வருகிறார்.உளுந்தூர்பேட்டை அருகே உருவாகி வரும் ஸாலிஹீன் மருத்துவ கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவன அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராகபொறுப்பேற்றுசேவையாற்றிவருகிறார்.2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட ஷாஜகான் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அமைச்சரவையில்இடம்பிடித்துள்ளார் ஏ.எம்.ஷாஜகான். இவருக்கு சிறுபான்மையினர் நலத்துறையானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.