தவெக வழக்கறிஞர்கள் மனவேதனை…?
தமிழக நீதியமைப்பில் மிக முக்கியப் பங்காற்றும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வு ஆகியவற்றில் அரசாங்கத் தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காகப் பல்வேறு உயர் பதவிகள் உள்ளன. இதில் அரசு தலைமை வழக்கறிஞர் (Advocate General), அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் (Public Prosecutor), கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் மற்றும் உரிமையியல் அரசு வழக்கறிஞர்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்ட மிக உயரிய பணியிடங்கள் காணப்படுகின்றன.பொதுவாக, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அந்தந்த காலகட்டத்தில் ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்கும் அமைப்பைச் சார்ந்த அல்லது அவர்களின் கொள்கைகளுக்கு இணக்கமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை இந்தப் பதவிகளில் நியமிப்பது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு எழுதப்படாத அரசியல் மரபாகும். அந்த வகையில், கடந்த திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த அரசாங்க வழக்கறிஞர்கள் அனைவரும், தவெக புதிய அரசை அமைத்தவுடன் தங்களது பதவிகளை முறைப்படி ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து புதிய நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்பு தவெக வழக்கறிஞர்கள் மத்தியில் பரவலாக இருந்தது.இந்தச் சூழ்நிலையில், தவெக அரசு வெளியிட்டுள்ள புதிய நியமனப் பட்டியலில், அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் அவர்களும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஜான் சத்யன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாகபி.வி.பாலசுப்பிரமணியம்மற்றும்டி.கவுதமன்ஆகியோர்பொறுப்பேற்றுள்ளனர் இந்தநியமனங்கள்தான்தற்போதுதவெகவின்தூண்களாகவிளங்கியமூத்தவழக்கறிஞர்களிடையே பெரும் ஏமாற்ற அலையை உருவாக்கியுள்ளது.ஏனெனில், நியமிக்கப்பட்டுள்ள உயர்பதவி அதிகாரிகள் அனைவரும் கடந்த காலங்களில் அனைத்திந்தியஅண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகம் (அதிமுக) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயணன், கடந்த 2017 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் இதே பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பாலசுப்பிரமணியம் மற்றும் கவுதமன் ஆகியோரும் முந்தைய அதிமுக ஆட்சியில் கூடுதல் அட்வகேட்ஜெனரல்களாகப்பணிபுரிந்தவர்களாவர்.இதனால்,தவெகவிற்காகக்களப்பணியாற்றிய வழக்கறிஞர்களைப் புறக்கணித்துவிட்டு, முந்தைய ஆட்சிகளில் வலம் வந்தவர்களுக்கே மீண்டும் தவெக ஆட்சியில் சிவப்புச் கம்பள வரவேற்புஅளிக்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.இது தொடர்பாகத் தங்களது மனவேதனையைப் பகிர்ந்துள்ள தவெக வழக்கறிஞர்கள், கட்சியின்ஆரம்பகாலவளர்ச்சிக்குத்தாங்கள்ஆற்றியப்பங்களிப்பைத் தற்போதைய தலைமை மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். கட்சித் தொடங்கப்பட்ட ஆரம்பக் காலகட்டத்தில் நடத்தப்பட்ட மூன்று மாநாடுகள் எவ்வித இடையூறுகளும் இன்றி வெற்றிகரமாக அமைந்தன. ஆனால், கரூரில் நடைபெற்ற மாநாட்டின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு, ஒட்டுமொத்த அரசியல் களமும் சமூகமும் தவெகதலைமைக்குஎதிராகத்திரும்பியதுடன்,பலரும்தவெகதலைவரைத்தனிமைப்படுத்தினர். அத்தகைய மிக இக்கட்டான, சோதனையான காலகட்டத்தில், தவெகவின் வழக்கறிஞரணி மட்டுமே தலைவருக்குப் பக்கபலமாக நின்று, அனைத்து சட்டப் பிரச்சனைகளிலிருந்தும் அவரையும் கட்சியையும் பாதுகாக்கும் அரணாகச் செயல்பட்டது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும், கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளையும் நியாயங்களையும் பதிவு செய்த தவெகவினர் மீது அன்றைய திமுக அரசு கடுமையான ஒடுக்குமுறைகளைக் கையாண்டதாக அவர்கள் நினைவு கூர்கின்றனர். அச்சமயத்தில்கட்சியின்தீவிரத்தொண்டர்கள்217பேர்குண்டர்சட்டத்தின்கீழ்சிறையிலடைக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுமார் 5,328 தவெகவினர் பல்வேறுபிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அப்போது, சொந்தப் பணத்தைச் செலவழித்து, குடும்பத்தைப் பிரிந்து, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடி ஓடிப் பணியாற்றியது தவெக வழக்கறிஞர் அணிதான். சிறையிலிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உரியச் சட்ட உதவிகளை வழங்கி, அவர்கள் அனைவரையும் பிணையில் (ஜாமீன்) மீட்டெடுத்துக் கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றிய பெருமைதங்களுக்கேஉரியதுஎன்றும்அவர்கள்வாதிடுகின்றனர்.இப்படிப்பட்டதியாகங்களையும், சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்த தவெக வழக்கறிஞர்களை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, மாற்று முகாம்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த 180 அரசு வழக்கறிஞர் பதவிகளிலும் முக்கியப் பொறுப்புகளை வழங்குவது, கட்சிக்காக உழைத்தவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.