தவெக சார்பாக நடிகை திரிஷா ராஜ்ய சபா எம்பியாக விரைவில் தேர்வு…
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்துள்ளது. தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவிலிம் எஸ்பி வேலுமணி தரப்பில் உள்ள 25 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.இந்த நிலையில் தவெக தரப்பில் டெல்லியிலும் காய்களை நகர்த்த திட்டமிட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் 2029ல் நடப்பதால், அதுவரை மக்களவைக்குள் தவெக செல்ல வாய்ப்புகள் கிடையாது. ஆனால் ராஜ்ய சபாவில் தவெக தரப்பில் ஒரு உறுப்பினரையாவது கொண்டு செல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே அதிமுக சார்பாக மயிலம் தொகுதியில் வென்ற சிவி சண்முகம் ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் இப்போது பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், மீண்டும் அதிமுக சார்பாக ராஜ்ய சபா எம்பி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தரப்பில் ஒரு ராஜ்ய சபா எம்பியை அனுப்ப திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஒரு ராஜ்ய சபா உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க வேண்டும். இதனால் தவெக சார்பாக நடிகை திரிஷா ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்படலாம் என்று சில தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், டெல்லியில் தங்கள் சார்பாக பேச்சுவார்த்தைநடத்த ஒரு பிரிவை உருவாக்கும்.முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முரசொலி மாறன் இருந்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-க்கு ஜெயலலிதா இருந்தார். 1984ல் ஜெயலலிதா ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தபோது, பேரறிஞர் அண்ணா அமர்ந்த 185-ம் எண் இருக்கை ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு தம்பிதுரை மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் இருந்தனர். ஸ்டாலினுக்கு டிஆர் பாலு, கனிமொழி இருந்தனர். அந்த வகையில் விஜய்க்கு நம்பிக்கையாக நடிகை திரிஷா இருந்து வருகிறார். இதனால் தவெக தரப்பில் நடிகை திரிஷா ராஜ்ய சபாவுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று
சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன்நடிகைதிரிஷாவுடன் தவெக தலைவர் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒரே டிசைனில்ஆடைஅணிந்துபங்கேற்றார். தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான போதும், விஜய் வீட்டிற்கு திரிஷா வந்தார்.தமிழக முதல்வராக விஜய்பதவியேற்றபோதும்,அந்தநிகழ்ச்சியில் திரிஷா பங்கேற்றார். ஏற்கனவே திரிஷாவும் அரசியலில் ஆர்வம் இருப்பதாக கூறி இருக்கிறார். வழக்கமாக தங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் நபர்களையே முக்கிய பொறுப்புகளில் கட்சித் தலைவர்கள் அமர்த்துவார்கள். தமிழக அரசின் தலைமை கொறடாவாக சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய்யின் கார் ஓட்டுநரின் மகன். விஜய் நடத்தும் நிறுவனத்தின் பங்குதாரராகவும் சபரிநாதன் இருக்கிறார். அதேபோல் டெல்லிக்கு தனக்கு நம்பிக்கையாக இருக்கும் திரிஷாவை அனுப்ப விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நடிகை திரிஷாவும் புதிய படங்களை கமிட் செய்து கொள்ளவில்லை. இதனால் விரைவில் திரிஷாவின் அரசியல் என்ட்ரி இருக்கும் என்று கருதப்படுகிறது.