த. வெ. க. சார்பாக போக்குவரத்து தொழிற்சங்கம் தொடங்க ஏற்பாடு…!


கோயம்பேடு போக்குவரத்து பணிமனையில் த. வெ. க. கொடி ஏற்றியபணியாளர்கள் !! தமிழக முதல்வராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் கோயம்பேடு பணிமனை காஞ்சிபுரம் மற்றும் வேலூர்மண்டலங்களைச்சேர்ந்தபணியாளர்கள் கோயம்பேடு-2 பணிமனை நிர்வாகி சுரேஷ், வேலூர் மண்டலம் எம்.கண்ணன், கோயம்பேடு-1 பணிமனை இ.ரமேஷ்பாபு ஆகியோர் ஏற்பாட்டில் பட்டாசுகள் வெடித்து தமிழக வெற்றிக் கழக கொடியை ஏற்றி வைத்தனர்.பின்னர் தொழிலாளர்கள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுகோயம்பேடு பணிமனையில் பல்வேறு கட்சிகளுக்கு தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் த.வெ.க சார்பில் தொழிற்சங்கம் துவங்க இருப்பதாகவும், முதல்வர்.விஜய் அரசு தொழிலாளர்கள் நலன் சார்ந்த அரசாக அமையும் என நம்பிக்கை கொள்வதாகவும்,எனவே ஒற்றுமையுடன்த.வெ.கஅரசுபோக்குவரத்துகழகஊழியர்கள்செயல்படுமாறுகேட்டுக்கொண்டனர்.கோயம்பேடு-1 பணிமனை நிர்வாகிகள் கன்னியப்பன், எஸ். குமார், கோயம்பேடு-2 பணிமனை நிர்வாகிகள் கே.டில்லிபாபு, வி.கன்னியப்பன், வேலூர் மண்டலம் நிர்வாகிகள் கே. ரமேஷ்பாபு,பி. ரகுபதி,ஏ. செந்தில் குமார், அறிவழகன், ராஜேஷ், ஏழுமலை, செந்தில்நாதன் உள்பட போக்குவரத்து கழக பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.