fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 559 இந்தியர்கள்…! 4 சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர்!

559 Indian returned home from various countries

சென்னை:

வெளி நாடுகளில் சிக்கித் தவித்த, 559 இந்தியர்கள், 4சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசானது, ‘வந்தே பாரத்’ என்னும் திட்டத்தை துவக்கியது.

அதன்படி, பல்வேறு நாடுகளில் இருந்தும் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் லட்சக் கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் வளைகுடா நாடுகளான சூடான், கிர்கிஸ்தான், ஓமன் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் இருந்து 4 சிறப்பு விமானங்கள் சென்னைக்கு வந்தன. அந்த விமானங்களில் தகுந்த பாதுகாப்பு அமைப்புகளுடன் 559 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர்.

அவர்களுக்கு சென்னை விமானநிலையத்தில் உரிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் விதிகளின்படி, தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து வந்த விமானத்தில், அந்நாட்டில் மருத்துவம் படித்து வந்த, இந்திய மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close