fbpx
Others

ராகுல் காந்தி—லோக்சபாவில் அரசின்உத்தரவுக்குஇணங்கிசபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்..

சபாநாயகரின் கடமைகள் என்ன? | விளக்கப்பட்டது - தி இந்துஇதுதீவிரமானகவலையைஅளிக்கிறது.இதுமுன்னெப்போதும் இல்லாத நடைமுறை. எதிர்க்கட்சி தலைவரைஉரையாற்றவிடாமல்தடுக்கப்படுவதற்குசபாநாயகர்நிர்பந்திக்கப்பட்டுள்ளார்என்றும்ராகுல்காந்திகடிதத்தில்கூறியுள்ளார்.லோக்சபாவில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் மக்களவையில் 2-வது நாளாக இன்று நடைபெற்றது. அவை கூடியதும் விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, ”சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக ராணுவ முன்னாள் தளபதி தெரிவித்த கருத்துகளை தெரிவிக்க முடியாமல் நான் தடுக்கப்பட்டேன். நரவனேவின் சுயசரிதை தொடர்பான அந்த கட்டுரையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நான் உறுதிப்படுத்தி உள்ளேன். அது பாதுகாப்பு தொடர்பானது” என கூறினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சபாநாயகரின் அனுமதி பெற்று ராகுல் காந்தி இது குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தினார்.அதற்கு ராகுல் காந்தி, ”நான் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர். யாருடைய அனுமதியும் எனக்கு தேவை இல்லை”Rahul Gandhi என்றார். அதற்கு கிரண் ரிஜிஜு, ”யாராக இருந்தாலும் சபாநாயகரிடம் அனுமதி பெற்றே பேசுகிறார்கள். சபாநாயகரின் அனுமதி இன்றி யாரும் பேசுவது இல்லை” என குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘உறுதி படுத்தப்படாத ஆவணங்களை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த சட்ட விதிகளில் இடம் இல்லை.எனவே, அது குறித்து நீங்கள் பேசக்கூடாது. ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் அளவில் உங்கள் பேச்சு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்” என தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, ”ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முக்கிய விஷயம் தேசிய பாதுகாப்பு பற்றியது. பாகிஸ்தான், சீனாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் உறவு பாதுகாப்பு தொடர்பானதே.இந்த கட்டுரையில் மிக முக்கிய விஷயம் உள்ளது. அது பிரதமரின் எதிர்வினையை பற்றி பேசுகிறது” என்றார். இந்த விவகாரத்தால் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது. இதற்கிடையே, லோக்சபாவில் பேச அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஆளும் கட்சி கூறியதற்காக எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை தடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை நான் பேசக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எதிர்க்கின்றனர். நான் இன்று அவையில் பேசும் போது, நான் சுட்டிக்காட்டி பேச இருந்த இதழ் கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.நீண்ட காலமாக உள்ள மரபு மற்றும் இதற்கு முந்தைய சபாநாயகர்கள் கடைபிடித்த விதிகள் என்னவென்றால், ஒரு அவையில் ஒரு ஆவணத்தைக் குறிப்பிட விரும்பும் உறுப்பினரே , அதைச் சரிபார்த்து, அதில் உள்ள கருத்துகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த நடைமுறையை நான் முறையாகப் பின்பற்றினேன்.இதன்பிறகு உறுப்பினரை பேச மக்களவை துணை சபாநாயகர் - விக்கிபீடியாசபாநாயகர் அனுமதிப்பார். அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும். சபாநாயகரின் பங்கு அத்துடன் முடிந்து விடுகிறது. லோக்சபாவில் என்னை பேசவிடாமல் தடுத்தது மரபுகளை மீறும் செயல் மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் எதிர்க்கட்சி தலைவராக நான் பேசுவதை தடுப்பதற்கு நடைபெற்ற திட்டமிட்ட முயற்சியாகும்.இது தீவிரமான கவலையை அளிக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாகும். இந்த அடிப்படை ஜனநாயாக உரிமைகளை மறுப்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசின்உத்தரவுக்கு இணங்கி, எதிர்க்கட்சி தலைவரை உரையாற்ற விடாமல் தடுக்கப்படுவதற்கு சபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்றுராகுல் காந்திகூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close