Others
ராணிப்பேட்டை—தவறவிட்ட ரூ.30 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு…
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் வாங்குவதற்காக முரளி சென்ற போது, பாக்கெட்டில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் தவற விட்டார். இதுகுறித்து அவர் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை ஆய்வாளர் .வசந்தகுமார் தலைமையிலான சீனிவாசன் போலீஸ் விசாரணை நடத்தி, பணத்தை கண்டுபிடித்து முரளிவிடம் ஒப்படைத்தனர். போலீசாருக்கு முரளி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு . சமூக ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.