GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
விருதுநகரில் காவலருக்கு கொரோனா..! போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு!
Tamilnadu cop affected by corona

விருதுநகர்:
விருதுநகரில் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட காவல் நிலையம் மூடப்பட்டது.
பாதிக்கப்பட்ட அவர் தற்போது வரை விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மதுரையில் தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனோ இருப்பது உறுதியானது.
இதை அடுத்து அவர் வசித்த பகுதி, பணிபுரிந்த விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.
கிருமிநாசினி தெளித்து, தீயணைப்பு வீரர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.
அதில் பணிபுரியும் 21 காவலர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
















