fbpx
Others

உலக முதலுதவி தின—சிறப்பு செய்தி

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,தேனி மாவட்ட கிளை.

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு தேனி, என்.ஆர்.டி.நர்சிங் கல்லூரி மாணவியர்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடைபெற்றது.
ரெட் கிராஸ் சேர்மன் மரு.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் தலைமை தாங்க அட்மின் செயலர் திருமதி.மீனாம்பிகை வரவேற்புரை நல்கினார்.
கௌரவச் செயலாளரும் முதலுதவி பயிற்றுநருமான திரு க.சுருளிவேல் அவர்கள் முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் ஈ.ஜெகநாதன் அவர்கள் முதலுதவி பற்றிய தகவல்களை சமுதாயத்தில் உள்ள அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.நிகழ்வில் 150 மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.உறுப்பினர் திரு.நாகராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நன்றி. ஆண்டிபட்டி செய்தியாளர் வேல்முருகன்

Related Articles

Back to top button
Close
Close