fbpx
Others

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் உட்பட 132 நபர்களுக்கு பத்ம விருது..

 நடப்பாண்டுக்கான பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 132 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  * கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கபட்டது.* முன்னாள் குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவிற்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டது.

* தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி-க்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டுள்ளது.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவிற்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டுள்ளது.  * பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷன் விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.  * தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்மவிபூஷன் விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.  * சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்-க்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கபட்டது.  * ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா-வுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது ஒன்றிய அரசு. * கோவையைச் சேர்ந்த 87 வயதான வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்டது. * மருத்துவத்துறை சேவைக்காக ஜி.நாச்சியார், நாதஸ்வர வித்துவான் சேஷம்பட்டி சிவலிங்கம் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்டது.

Related Articles

Back to top button
Close
Close