fbpx
Others

மதுரை எம்பி–கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை–சிபில் ஸ்கோர்…?

cibil-score-is-calculated-by-an-american-company-says-mp-su-venkatesanசிபில் ஸ்கோர் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி. கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பது உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று மதுரை எம்பி சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றாலும், கிரெடிட் கார்டு வாங்க வேண்டும் என்றாலும் முதலில் வங்கிகள் சிபில் ஸ்கோர் என்ற அளவீட்டை பார்க்கின்றன. வங்கிக்கு கடன் வாங்க சென்றாலும் முதலில் வரும் கேள்வி சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கு என்பது தான். சிபில் ஸ்கோரை பொறுத்தே எவ்வளவு தொகை லோன் கிடைக்கும், எவ்வளவு வட்டி என அனைத்தும் முடிவாகிறது.இந்த சிபில் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது, யார் கணக்கிடுகிறார்கள் என்பதில் எந்த வெளிப்படத்தன்மையும் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான், மதுரை எம்பி சு வெங்கடேசன், சிபில் ஸ்கோர் முறையை கைவிட்டு கடன் பெறும் தகுதியை ரிசர்வ் வங்கியே தீர்மானிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:- சிபில் ஸ்கோர் முறையை நீக்க வேண்டும் சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும். 60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி இந்திய சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் சிபில் ஸ்கோர் தீர்மானிக்கிறது. இவர்களின் அநீதிக்கு கார்ப்பரேட் முதலாளிகள் விதிவிலக்கு.

Related Articles

Back to top button
Close
Close