fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனா எல்லைகள்…! முக்கிய நடவடிக்கை எடுத்த சென்னை மாநகராட்சி.

Chennai corporation delimits to containment zone

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பளவை குறைத்துள்ளது சென்னை மாநகராட்சி.

கொரோனா பாதிப்பினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் சென்னை பரிதாப நிலையில் இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்புகள் மிக அதிகம்.

இதுவரை சென்னையில் 587 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்துடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந் நிலையில் மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை முழுவதுமாக தடுப்புகளை கொண்டு அடைக்காமல் வைரஸ் பாதித்த வீடு, சுற்றியுள்ள சில வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றை மட்டும் தடுப்பு கொண்டு அடைக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால் அந்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை கொண்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பாக மாஸ்க் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close