வால்பாறை சுற்றுலா தலத்தில் காதலர் தினக் கூட்டம் அதிகரிப்பு….
கோவை மாவட்டத்தின் பிரபலமான மலைப்பகுதி சுற்றுலா தளமான வால்பாறையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலை முதலே வானிலை இனிமையாகவும், பனிமூட்டம் சூழ்ந்த சூழலும் காணப்பட்டதால், பலரும் தங்கள் துணையுடன் இயற்கை அழகை ரசிக்க வந்திருந்தனர்.
வால்பாறையின் முக்கிய பார்வை இடங்களான நீர்வீழ்ச்சிகள், அணைகள் மற்றும் தேயிலை தோட்டப் பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள், மலர் கொத்து மற்றும் பரிசுப் பொருட்களுடன் வந்த ஜோடிகள் என காதலர் தினத்தின் உற்சாகம் முழுவதும் பரவியிருந்தது.சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வால்பாறையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர். “இயற்கையை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது” என்று அவர்கள் வலியுறுத்தினர்.காதலர் தினத்தை முன்னிட்டு வால்பாறை முழுவதும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டக் களமாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.கோவை மாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ் தே

