fbpx
REஅரசியல்இந்தியா

பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றங்களை முன்வைத்த மம்தா பேனர்ஜீ!!

Mamata Banerjee tears into the centre at PMs conference

கொரோனாவின் கோரத் தாண்டவம் காரணமாக இந்தியா தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி முதமைச்சர்களுடன் நேற்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதில் மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பேனர்ஜியும் கலந்துக்கொண்டார்.

ரயில்களை மேற்குவங்கம் அனுமதிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் எனக்கு கடிதம் எழுதினார்?. அவர் நேரடியாகவே என்னிடம் பேசி இருக்கலாம். அவர் கடிதம் எழுத காரணம் என்ன? அந்த கடிதத்தை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார். மக்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். அவர் அவ்வாறு செய்தது அதிருப்தி அளிக்கிறது போன்று தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மத்திய அரசிற்கு பணம் வேண்டுமானால் எங்களிடம் கேளுங்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் மத்திய அரசு ரயில் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. கொரோனா அடுத்த நாட்டில் இருந்து பரவியது, ஆனாலும் நாம் அவர்களின் மீது குற்றம் கூறவில்லை. அப்படி இருக்கையில் நம் மக்களையோ, நம் மாநிலங்களையோ எப்படி சுட்டிக்காட்ட முடியும்? என கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தை அரசியல் ரீதியாக குறி வைக்கிறீர்கள். அந்தந்த மாநிலத்தின் நிலவரம் அந்தந்த மாநிலத்தின் அரசிற்கே தெரியும். ஊரடங்கு முடிவுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகளை முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் போன்றவற்றை கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள சுமார் 10லட்சம் மக்களில் இரண்டாயிரத்திற்கு மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. எங்களிடம் கொரோனாவை கண்டறியும் ரேப்பிட் கருவிகள் குறைவாகவே உள்ளது.இருப்பினும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கம் சிறப்பாகவே செயல்படுகின்றது எனவும் கூறினார்.

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close