திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னையில் தற்கொலை—வயது 85.
தயாரிப்பாளர் கே.ராஜனுக்கு மனைவி, 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கின்றனர்.அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ராஜன் மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.நேற்று காரில் வேளச்சேரி சென்றுவிட்டு திரும்பும் வழியில் அடையாறு திரு.வி.க பாலம் வந்ததும் காரை நிறுத்துமாறு ஓட்டுநர் தனசேகரனிடம் கூறியுள்ளார். ‘மெதுவாக காரில் செல்லுங்கள். சிறிது தூரம் காலாற நடந்து வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார் ஓட்டுநர் காரை நிறுத்தியதும், இறங்கிச் சென்று ஆற்றில் குதித்துள்ளார்.பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85. சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் வழியாக நேற்று மாலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.மாலை 4.25 மணி அளவில், அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று அடையாறு பாலத்தில் நின்றது. வெள்ளை முழுக்கை சட்டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதியவர் ஒருவர் காரில் இருந்து இறங்கினார். திடீரென பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடையாறு ஆற்றில் குதித்தார்.இதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றில் தத்தளித்தவரை மீட்க முயன்றனர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.மயிலாப்பூர், சைதாப்பேட்டையில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள், ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.ற்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தயாரிப்பாளர் கே.ராஜனுக்கு மனைவி, 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கின்றனர்.அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ராஜன் மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.கடந்த 1983-ல் சுரேஷ் நடித்து வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் கே.ராஜன். ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’ உட்பட சில திரைப்படங்களை தயாரித்துள்ளார்.‘நம்ம ஊரு மாரியம்மா’, ‘உணர்ச்சிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், ‘மைக்கேல்ராஜ்’, ‘உளவுத்துறை’, உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது, திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கே.ராஜன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு ஆளுமை. தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். கே. ராஜன் பற்றியமுக்கியகுறிப்புகள்:திரைப்பயணம்: 1983-இல் ‘பிரம்மச்சாரிகள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.முக்கியப் படங்கள்: ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளை’,’இரட்டையர்’போன்றபலகுறிப்பிடத்தக்கதிரைப்படங்களைத்தயாரித்துள்ளார்.திரையுலகப் பங்களிப்பு: இவர் சினிமா தொடர்பான மேடைகளில் தயாரிப்பாளர்களின் நலன்களுக்காகவும், சிறு முதலீட்டுப் படங்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். திரையுலகில் நடக்கும் முறைகேடுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டும் கே. ராஜன்..