fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ரயில் பயணத்தில் டிக்கெட்டை விட ‘இது’ அவசியம்…! இல்லைன்னா இறக்கி விட்டுடுவாங்க..!

Aaroghya sethu app compulsory for train passengers

சென்னை:

ஆரோக்ய சேது செயலியை தங்கள் மொபைலில் வைத்திருக்கா விட்டால் ரயிலில் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாடெங்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக சென்னையிலிருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு ரயில் புறப்படும்.

இந்நிலையில் சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி,சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் அதை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் 24 மணி நேரத்திற்கு முன்னதாக செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகையில் இருந்து 50% மட்டுமே திரும்ப கிடைக்கும்.

மருத்துவ பரிசோதனைக்காக ரயில் புறப்படும் 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையங்களுக்கு வந்துவிட வேண்டும். ரயிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவதும், சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவுவதும் அவசியம்.

வழக்கமாக குளிர்சாதன பெட்டிகளில் வழங்கப்படுவது போல போர்வைகள் வழங்கப்படாது. பயணிகள் தேவையானவற்றை வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், உணவு தரப்படும்.

சிறப்பு ரயில்களில் பயணிக்கும் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை  மொபைலில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பயணிக்கும் முன்னர் பதிவேற்ற அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என்று  கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close