fbpx
Others

தமிழ்நாடு.மந்திரிகள் கலக்கம்..?

தமிழ்நாடுசட்டசபைவிரைவில்மாற்றமா..?  ஜனாதிபதி தமிழகம் வந்து டெல்லி திரும்பிய பின்பு…. அல்லது கர்நாடக தேர்தல் முடிவுக்கு பிறகு…மந்திரிகள் கலக்கம்….

டெல்லி :ஜூன் 5ம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டுள்ளது. இம்மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளதுஇந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று காலை டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் அவரை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வரவேற்றார். திமுகவின் பிற முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர். மேலும், போலீஸாரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் முதல்வருக்கும் வழங்கப்பட்டது.தொடர்ந்து காலை 11 மணி அளவில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை கிண்டி, பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை கொடுத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்ற திரவுபதி முர்மு வருகிற ஜூன் 5ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினமே கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close