fbpx
Others

கோவை–பாரம்பரிய தற்காப்பு கலைகளின் கலந்தாய்வு கருத்தரங்கம்..

கோவை கே. பி. ஆர் கல்லூரியில் பாரம்பரிய தற்காப்பு கலைகளின்கலந்தாய்வுகருத்தரங்கம்நடைபெற்றது,அமைச்சர் மனோ. தங்கராஜ் பங்கேற்றார்!!தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளான சிலம்பம். அடிமுறை. களரி. குத்துவரிசை. வர்மம் ஆகியவற்றின் பெருமையை இன்றைய தலைமுறையினர் உணரும் வகையில் கோவை கே. பி. ஆர் கல்லூரியில் உலக களரி கூட்டமைப்பு மற்றும் இந்திய களரி அறக்கட்டளை இணைந்து ஆய்தம் 20 24 என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கனை ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியை கே.பி. ஆர் குழுமங்களின் தலைவர் கே. பி. ராமசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இன்றைய காலகட்டத்தில் தற்காப்பு கலைகள் மிகவும் அவசியம் இளைஞர்களை. மாணவர்களை நேர்வழிப்படுத்த இது போன்ற கலைகளை கற்றுத் தர வேண்டும். என்று வாழ்த்துறையில் தெரிவித்தார் ..
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது;தற்போது அழியும் நிலையில் உள்ள தமிழக பாரம்பரிய போர்க்கலைகளான களரி, சிலம்பம், அடிமுறை, குத்துவரிசை, சிரம்பம், வர்மம் போன்ற அற்புதமான தற்காப்பு கலைகளை மீட்டெடுப்பதற்கு தமிழக அரசு கன்னியாகுமரியில் பாரம்பரிய தமிழ் தற்காப்பு கலைகளின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறது.இப்பாரம்பரிய கலைகளை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும்.இந்த கூட்டமைப்புக்கு அரசு மூலம் தகுந்த உதவிகளை செய்வோம் என்றார் .இந்திய வருமான வரித்துறை ஆணையர். நந்தகுமார் பேசும்போது;இளம் தலைமுறையினர் தங்கள் மனதினை ஒருமைப் படுத்தவும் நினைவு திறனை மேம்படுத்தவும் உடலை வலிமைப்படுத்தவும் சிலம்பம் ,களரி போன்ற தற்காப்பு கலைகளை அனைவரும் தவறாமல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.முதல் நாள் கருத்தரங்க நிகழ்ச்சியை தலைமை ஏற்று தொடங்கி வைத்த உலக களரி கூட்டமைப்பின் தலைவர். ரமேஷ் ரத்தினகுமார் பழந்தமிழர் வளர்த்த கலைகளை மீட்டெடுத்து இன்றைய சமூகத்திடம் சேர்ப்பதோடு வருகின்ற 2032 ஒலிம்பிக் போட்டியில் களரி, சிலம்பம் போன்ற கலைகள் இடம்பெறச் செய்ய வேண்டும். என்பதே எங்கள் இலக்கு என்றார்.உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க தலைவர். என் .ஆர்தனபாலன் பேசும்போது ;தமிழ்நாடு அரசு விளையாட்டு துறைக்கு மிகுந்த ஆதரவை அளித்து வருகிறது கன்னியாகுமரியில் தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலைகளை மீட்கவும் பாதுகாக்கவும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது எங்கள் சங்கத்தின் சார்பாக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்என்றார்.நிகழ்ச்சியில் தமிழக முழுக்க இருக்கும் பாரம்பரிய தற்காப்பு கலை மூத்த ஆசான்கள் 25 பேருக்கு கூட்டமைப்பின் சார்பில் சான்றிதழ் , பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து சேயோன் விருது வழங்கப்பட்டது.இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் ,உலக சிலம்ப ஆசான்கள் சங்க தலைவர் .என்.ஆர். தனபாலன் ஆகியோர் நிகழ்ச்சியில் இந்திய களரிகூட்டமைப்பு தலைவர். வனிதா.வழங்கினர்.கே. பி .ஆர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர். கீதா, ஐஸ்வர்யா பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர். பரமேஸ்வரன், பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் .முருகவேல் உலக களரி கூட்டமைப்பு தகவல் தொடர்பு அலுவலர். அனுராதா. மருத்துவர். ராஜேந்திரன். அழகேசன்.மும்பைஐஐடியின்உடற்கல்விஅலுவலர்.பிரபுபாண்டியன்.நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கல்லூரியின் உடற்கல்வித்துறை தலைவர். முனியசாமி ஆசான் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close