fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல…. வெற்றிகரமான பிரதமர்- சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் !

மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.

தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் “The Accidental Prime Minister” என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாஜக ஆதரவாளரான அனுபம்கர், மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் “ஆக்சிடென்டல் பிரதமர்” படத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆனாலும் வருகிற 11-ந் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.

“ஆக்சிடென்டல் பிரதமர்” திரைப்படம் குறித்து, சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது;

“இந்திய நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளார். அவரை மக்கள் மதிக்கின்றனர். எனவே அவர் தற்செயலாக திடீரென பொறுப்புக்கு வந்த பிரதமர் அல்ல என்று நான் கருதுகிறேன்.

நரசிம்மராவுக்குப் பின்னர் நாடு ஒரு வெற்றிகரமான பிரதமரை பெற்றிருக்கிறது என்றால் அவர் மன்மோகன்சிங் தான்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close