fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

குடியோ.. குடி..! குஷியோ குஷி…! உற்சாகத்தில் மிதந்த மதுபிரியர்கள்

Tasmac opened customers happy

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டன.

கடைகள் திறந்ததும் மது பிரியர்கள் ஆர்வத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒரே நேரத்தில் முண்டியடித்து மது வாங்குவதை தவிர்க்கும் வகையில் வயது வாரியாக பிரித்து வழங்கப்பட்டது. காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை 50 வயதுக்கு அதிகமானோருக்கு மது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பிற்பகல் 1 மணியில் இருந்து 3 மணிவரை மது வழங்கலாம். 40 வயதுக்கும் கீழானவர்களுக்கு பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 5 வரை மது செய்யப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருவோர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆகையால் வரிசையை ஒழுங்குபடுத்த தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மதுக்கடைகளை திறந்திருப்பதால் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும், கொரோனாவை பரப்பும் ஹாட்ஸ்பாட் மையங்காக டாஸ்மாக் கடைகள் மாறிவிடும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

Tags

Related Articles

Back to top button
Close
Close