முக்கிய மசோதா சட்டப்பேரவையில் இன்றுதாக்கல்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது நாள் கூட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பளங்கள் வழங்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா மற்றும் தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதா ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பான சட்ட முன் வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த இரண்டு சட்டம் வடிவுகள் வெள்ளிக்கிழமை அன்று நிறைவேற்றப்பட உள்ளது.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் 30 ஆயிரத்தலிருந்து 35 ஆயிரம் ஆகஉயர்த்தி வழங்கப்படுவது தொடர்பான சட்ட முன்வடிவை தமிழக முதலமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இரண்டு திருத்த சட்டம் முன் வடிவுகள் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை 9:30 மணிக்கு கூடியதும் வினாக்கள் விடைகள் நேரம், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். அதைத்தொடர்ந்து பேரவையில் சட்டம் முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட உள்ளது.