fbpx
RETamil NewsTechnology

சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

மத்திய அரசு இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்காக சரக்கு மற்றும் சேவை வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக தற்சமயம் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நன்மையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக சியோமி நிறுவனம் இந்தியாவில் டிவி விலையைக் குறைத்துள்ளது.

இந்திய சந்தையில் சியோமி ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. சியோமி நிறுவனம், எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் டிவிகளை விற்பனைக்கு கொண்டுவருகிறது.

2019 புதிய வருடம் தொடங்கிய முதல் நாளில் சியோமி தனது ஸ்மார்ட் டிவிகளின் விலைகளை குறைத்துள்ளது. அவற்றின் விலை நிலவரங்களை பார்க்கலாம்.

சியோமி தனது Mi TV 4A மற்றும் Mi TV 4C ப்ரோ 32 இஞ்ச் டிவி மாடல்களின் விலையை 2000 ரூபாய் குறைத்துள்ளது. மேலும் ரூபாய் மதிப்பு அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால் சியோமி 4A ப்ரோ 49 இஞ்ச் டிவி விலையை 1,000 ரூபாய் குறைத்துள்ளனர்.

இதன்படி, சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4ஏ (32 இஞ்ச்) சாதனத்திற்கு ரூ.1500-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4சி (32 இஞ்ச்) சாதனத்திற்கு ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4ஏ, ’49’-இன்ச் சாதனத்திற்கு ரூ.1000-வரை விலை குறைக்கப்பட்டு 30,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விரைவில் சாம்சங், எல்.ஜி., டி.சி.எல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close