fbpx
Others

வளவனூரிலுள்ள மது கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…?

மது கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைவளவனூரிலுள்ள மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வளவனூர் ஊராட்சிக்குட்பட்ட ராந்தம் செய்யார் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை க.எண் 11002 செயல்பட்டு வருகிறது இந்த சாலையில் இயேசு நாதர் ஆலயம் உள்ளது, தனியார் ஆங்கில வழி கல்வி ஆரம்பப் பள்ளி உள்ளது 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய சாலையாகும்இந்த சாலையில் உள்ள அரசு மதுபான கடைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து மதுபான பிரியர்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் மதுபான பிரியர்கள் குடித்து வெறித்து செய்யும் அட்டகாசங்களை வளவனூர் கிராம பொதுமக்கள் நம்மிடம் மனம் திறந்தனர் மதுபான பிரியர்களால் தினமும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது அண்டை கிராமங்களில் இருந்து வரும் மதுபான பிரியர்கள் ஒருவருக்கொருவர் வெட்டி மடிகின்றனர் மதுபான பாட்டில்களை ரோட்டிலேயே உடைக்கின்றனர்ஆவ்வவப்போது கடைகளை உடைத்து நொறுக்குகின்றனர் அரியூர் சுணைப்பட்டு, வளவனூர் பூந்தண்டலம்சட்டுவந்தாங்கள் அரும்பாக்கம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் வளவனூர் வந்து தான் பஸ்ஸில் ஏறி பயணம் செய்ய வேண்டும் இப்படி சாலையில் வந்து செல்லும் பெண் பிள்ளைகளை கேலி கிண்டல் செய்வது, அட்டகாசம் பண்ணுவது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்பெண் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்து செல்லும் அவளநிலை ஏற்பட்டுள்ளது என்றனர் மேலும் வளவனூர் சமுதாயக் கூடத்தில் மதுபான பிரியர்கள் மது பாட்டில்களை உடைத்து அங்கேயே வீசி செல்கின்றனர் வாலிபப் பிள்ளைகள் பெரும்பாலும் குடிக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர் சமீபத்தில் எசையனூர் மற்றும் மூஞ்சூர் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் மதுபான கடையருகில் ஏற்பட்ட சண்டையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்இதில் மூன்று பேர் கத்தியால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்தனர்மதுபானக்கடை சம்பந்தமாக வளவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.சேகரிடம் விசாரித்தோம் வளவனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையூறாக இருக்கிறது இந்த கடையை அகற்றுவதற்கு இரண்டு முறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் 1971 இல் இருந்து வளவனூரில் சாராயக்கடை, கள்ளு கடை இயங்குவதற்கு அரசு அனுமதித்து வருகிறதுஇதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சீரழிந்து வருகின்றனர் துறை சார்ந்த அதிகாரிகள் கடைய அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்அதனைத் தொடர்ந்துசட்டுவந்தாங்கள் கிராம பொதுமக்கள் நம்மிடம் பேசுகையில் வளவனூர் ராந்தம் சாலையில் குடிகாரர்கள் குடித்துவிட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வெட்டி மடிகின்றனர்பல குடும்பங்கள் கெட்டுப் போச்சு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் கிராமத்துப் பெண்கள் வளவனூர் சாலையில் நடமாட முடியவில்லை குடிகாரர்களின் கலாட்டா அதிகரித்து வருகிறது மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் என்றனர் மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியா பால் கம்பெனியில் வேலை செய்யும் ரோஜி என்பவர் நம்மிடம் தினமும் காலையிலும் மாலையிலும் சுமார் 100 லிட்டர் பால் ஆரோக்கியா கம்பெனிக்கு எடுத்துச் செல்கிறேன்.டாஸ்மார்க் கடைக்கு வரும் மதுபான பிரியர்கள் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல்? ஏற்படுகிறது பால் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துச் செல்ல முடியாமல் தடைபடுகிறது அதேபோல்? சாலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன வளவனூரில் இயங்கி வரும் மதுபான கடையை மூட வேண்டும்இல்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி போராடுவோம்,? உண்ணாவிரதம் இருப்போம் அரசுத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close