Others
அத்திவாக்கம் கோட்டூர்–புரட்டாசி மாத திருவிழா..சிறப்பு செய்தி.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம்
தீர்த்தகிரியம்பட்டு ஊராட்சி அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை நடத்தப்பட்டது.பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது.இத்திருவிழாவில் சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி அருள் பெற்றனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்க ப்பட்டது.