fbpx
RETamil Newsஇந்தியா

ஒரே நாளில் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 3 காவலர்கள் சுட்டுக்கொலை!

ஒரே நாளில் 3 காவலர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமன சூழலை உருவாகியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல் கம் மாவட்டம் ஜாஜ்ரிபோரா கிராமத்தில் நேற்று பக்ரீத் தின சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது அஷ்ரப் தார் என்பவர் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முகமது அஷ்ரப் தார் புல்வாமாவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த தீவீரவாதிகள் வீட்டிற்குள் புகுந்தனர். கண்மூடித்தனமாக அவரை சுட்டனர். அதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து தீவிரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே குல்காம் மற்றும் புல்வாமாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் 2 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரேநாளில் மட்டும் 3 காவலர்கள் தீவிரவாதிகளால் அடுத்தடுத்து சுட்டு கொள்ளப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close