fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை — சிறப்பு செய்தி.

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை  தேதி : 13.05.2026

❇️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று (13.05.2026) பருவநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில்மரம்நடும்நிகழ்ச்சிநடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பே. சிபின், இ.கா.ப.,* அவர்கள் தலைமை தாங்கி, திலகவதி பவுண்டேஷன் உடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.❇️ இந்நிகழ்ச்சியில் மகிழம், நாகலிங்கம், நாவல் மற்றும் வெப்பாலை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையெனவும், மரங்களை வளர்த்து பசுமையை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC) இருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close