பாலிமர் டிவியில் பணியாற்றும் செய்தியாளரை தாக்கியது கொரோனா!

சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல தொலைகாட்சியான பாலிமர் செய்தியாலரையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயது பத்திரிகையாளருக்கும், பிரபல தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வரும் ராயபுரத்தில் தங்கியிருந்த உதவி ஆசிரியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் 24 வயது பத்திரிகையாளர் தங்கியிருந்த மேன்சன் அமைந்துள்ள திருவல்லிக்கேணி பெரிய தெரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளது.
மேலும் இந்த இரு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
அதேபோல அந்த செய்தியாளர் வேலை பார்த்து வந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் சென்னை பாலிமர் டிவி பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனோ தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடன் தங்கியிருந்த 4 பேருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் 4 பேருமே பாலிமர் டிவியில் பணியாற்றுபவர்கள் ஆவர். அதில் 2 பேர் நிருபர்கள். மேலும் பலருக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பாலிமர் செய்தியாளர் கொரோனாவுக்கும் தப்லீக் ஜமாத்திர்க்கும் தொடர்பு இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.















