fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தரும் ஜாக்பாட்…! என்ன தெரியுமா?

Tamilnadu government issues order

சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக தலா ரூ.1,000 தரும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா ஊரடங்கால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதால் அதை தடுக்க அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களாக வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல வாரியம், பனை மர தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்திருந்தார்.

இந் நிலையில், மீண்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக தலா ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 15 அமைப்பு  சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த  தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்  2வது முறையாக வழங்கப்படுகிறது. அதற்காக தமிழக அரசு ரூ.83.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், மீனவர்கள், பழங்குடியினர், திருநங்கைகள் உள்ளிட்ட 15 அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close