fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

மே 17க்கு பிறகு திறக்கப்படும் பள்ளிவாசல்கள், கோயில்கள்..? தமிழக அரசு சூசகம்

When will Religious places open?

சென்னை: அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறப்பது தொடர்பாக வரும் 15ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. தனிமனித விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நிம்மதி இழந்திருக்கும் தம்மை போன்றவர்களுக்கு அமைதியான சூழலை தருவது மத வழிபாட்டுத் தலங்களே.

புனித ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்குச் சென்று வர முடியவில்லை. எனவே வழிபாட்டுத்தலங்களை திறக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

அப்போது  தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், தமிழக அரசு வரும் 15 அல்லது 16 தேதிகளில் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பது குறித்து உரிய முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை, 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close