fbpx
RETamil News

அணைகளிலிருந்து எச்சரிக்கையின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டதுதான் கேரள வெள்ளத்திற்கு காரணம் – காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டு

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

வெள்ளநீர் வடியத்தொடங்கி உள்ளதால் விமானப்படை தன்னுடைய மீட்பு பணியை முடித்துவிட்டது.

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வீடுகள் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு மிகுந்த நிதி நெருக்கடியும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை இல்லாததே வெள்ளப்பாதிப்புக்கு கரணம் என அரசியல் கட்சிகள் இடையே குற்றச்சாட்டுகளும் தொடங்கியுள்ளது.

 

கேரளாவில் அணைகளில் எச்சரிக்கையின்றி தண்ணீர் திறந்துவிட்டதுதான் வெள்ளத்திற்கு காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கு மனித தவறுகள்தான் காரணம்.

எல்லா அணைகளும் தகுந்த முன் எச்சரிக்கையின்றி திறந்து விடப்பட்டதால் தான் பெரும்வெள்ளம் ஏற்பட்டது.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முன்னெச்சரிக்கையாக கொண்டு செல்லப்பட்டிருந்தால்
இந்த அளவிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.

அணைகள் திறப்பு விவகாரத்தில் மந்திரிகள் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை.

ஜூலை மாத மத்தியிலேயே அணைகள் 90 சதவீதம் அளவுக்கு நிரம்பிவிட்ட நிலையில் கேரள மாநில அரசு எச்சரிக்கைகளை மதித்து நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். எனவே நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close