fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

83 நாட்கள் கழித்து திருப்பதி கோயில் திறப்பு…! பக்தர்கள் தரிசனம்…!

Tirupathi temple opened

திருப்பதி:

83 நாட்கள் கழித்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பொது தரிசனம் தொடங்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனாவால் மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட அதன் காரணமாக கோயில், பள்ளிவாசல், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. பின்னர் சில நிபந்தனைகளுடன் கடந்த 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க  மத்திய அரசு அனுமதி தந்தது.

ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை முதல் பொது தரிசனம் தொடங்கியது. அதற்கான 3000 டிக்கெட்டுகள் ரூ.300க்கு ஆன்லைனில் விற்கப்பட்டன. இதையடுத்து 83 நாட்களுக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close