Others

விரைவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கலெக்டர் நேரில் ஆஜராகி, ரகசிய வாக்குமூலம்…..

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியராக ஜே.இ.பத்மஜா இஆப என்பவர் புதிய  ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார் இவர் விழுப்புரம் கூடுதல் ஆட்சியராக ...கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக, கலெக்டர் அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், எம்.எல்.ஏ., மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி., சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி., காமினி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., அன்பு, நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன், இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து,விசாரணைமற்றும்கண்காணிப்புஅதிகாரிகள்,கலெக்டர்மற்றும்வழக்கின்முக்கியசாட்சிகளாகசேர்க்கப்பட்டுள்ள டி.ஆர்.ஓ., – ஆர்.டி.ஓ., தாசில்தார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும்மெய்க்காப்பாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.நேற்று காலை, ஐ.ஜி., காமினி, எஸ்.பி., சிருஷ்டிசிங் இருவரும் கலெக்டரின் முகாம் அலுவலகம் சென்று, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கலெக்டரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்திலியில் உள்ள ஒருங்கிணைந்த வனஅலுவலகத்திற்கு சென்று, மாவட்ட வன அலுவலரிடம் விசாரணை நடத்தினர்.மதியம், 1:30 மணியளவில் சிருஷ்டிசிங், கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்றத்திற்கு வந்தார். தொடர்ந்து, 2:50 மணியளவில் நீதிமன்றத்திற்கு வந்த கலெக்டர், நீதிபதி சுவாதி அழகப்பன் முன்னிலையில் இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.அவரை தொடர்ந்து, டி.ஆர்.ஓ., -ஆர்.டி.ஓ.,தாசில்தார்,கலெக்டரின்நேர்முகஉதவியாளர்கள்மற்றும்மெய்க்காப்பாளர்கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் விவகாரம்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது நடவடிக்கை  கோரி தலைமைச் செயலரிடம் அதிமுக மனு! - kallakurichi collector message row  aiadmk seeks ... ஆகியோர் நீதிபதி முன்னிலையில் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தனர்.இதையடுத்து, பயணியர் மாளிகையில், விழுப்புரம் கலெக்டரிடம், எஸ்.பி., சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில், புகார் அளித்தவர்கள் மற்றும் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டவர்களிடம் விசாரணை நடந்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, ‘கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்திருப்பது, போலீஸ் விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியாக உள்ளது’ என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் செந்தாமலர் தெரிவித்துள்ளார்.பெண் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு, கண்ணியம், பணியிட உரிமைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது. பெண் அதிகாரிக்கு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நீதி கிடைக்கும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும். எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும்இடமில்லாததைஉறுதிசெய்யவேண்டும்என,அவர்தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, விசாரணை அதிகாரி, கண்காணிப்பு அதிகாரி இருவருமே, இதுவரை அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தவில்லை என, கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close