விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி விளக்கம்…(சோபா)
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பல அதிரடியான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதனையடுத்து நேற்றைய தினம் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவில் இருந்து ஒரு குழு தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. அவர்களுக்கு சோபா ஒன்று அனுப்பப்பட்டு, பின்னாடியே முதல்வரும் சென்றார் என விமர்சித்து இருந்தார்.இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கும் சோபா ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எங்க ஆபீஸுக்கு ஏற்கனவே ஆர்டர் செய்த சோபா தான் வந்தது. அந்த சமயத்தில் நீங்களும்
கேமராவை கொண்டு வந்துட்டீங்க.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசிக அலுவலகத்தை குறிப்பிட்டு பேசவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவில் உள்ள தலைவரை முதல்வர் சந்திக்க சென்ற போது நடந்த நிகழ்வைசுட்டிக்காட்டியே அவர்பேசியுள்ளார் எனவும்விளக்கம்அளித்துள்ளார்.மேலும்,தவெகவுக்குஆதரவுஅளிப்பதற்குகாலம்தாழ்த்தியதுகுறித்தும்பேசியுள்ளார்.அதாவது,தமிழகவெற்றிகழகத்துடன்நாங்கள்பேரம்பேசிகொண்டுஇருக்கிறோம்.பேரம்படிவதற்காககாத்திருக்கிறோம்எனஒருசிலர்வாய்க்குவந்ததைபேசிக்கொண்டுஇருந்தார்கள்.நாங்கள் இடதுசாரிகள் எடுக்கின்ற முடிவை ஒட்டி, எங்கள் கட்சி உயர்மட்ட குழுவினரிடம் பேசி முடிவினை எடுப்பேன் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதன்படி தான் முடிவு எடுத்தோம் என தெளிவுப்படுத்தியுள்ளார் திருமாவளவன். இதனிடையில் அவரை முதல்வராக்குவதற்குநடந்தமுயற்சிஎடப்பாடிபழனிசாமியால்தடுக்கப்பட்டதுஎன்றுசி.வி.சண்முகம்,எஸ்.பி.வேலுமணிஉள்ளிட்டோர்குற்றம்சாட்டியுள்ளனர்.அதாவதுதிருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்தி திமுக, அதிமுக இணைந்து ஆதரவு தருவதற்கு தயாராக இருந்தது. ஆனால் அதனைஇபிஎஸ் ஏற்கவில்லை. நான் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன். இல்லையென்றால் எதிர்க்கட்சி தலைவராக இருப்பேன் என அவர் கூறிவிட்டதாக சி.வி. சண்முகம் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பகிர்ந்த இந்த தகவல் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது.அதே நேரம் இபிஎஸ் தரப்பு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. திமுகவுடன் எந்த விதத்திலும் கூட்டணி பேசவில்லை. அரசியல் களத்தில் திமுக, அதிமுக எதிரெதிர் துருவங்கள். எனவே இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுவது முழுக்க முழுக்க வதந்தி என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் திருமாவளவனும் திமுக, அதிமுக சார்பில் இருந்துயாரும்தன்னிடம்அதிகாரப்பூர்வமாகபேசவில்லைஎனதெளிவுப்படுத்தியுள்ளார்.அதோடு தலித் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சமூகம் இன்னமும் தயாராகவில்லை என்பது கசப்பான உண்மை எனவும் திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனிடையில் நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானித்தில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.