வால்பாறை–‘சட்டம் பழகு’ சமூக நல அமைப்பின் முதலாம் ஆண்டு சிறப்பு கருத்தரங்கம்…
வால்பாறையில் ‘சட்டம் பழகு’ சமூக நல அமைப்பின் முதலாம் ஆண்டு சிறப்பு கருத்தரங்கம்
கோவை மாவட்டம் வால்பாறையில் ‘சட்டம் பழகு’ சமூக நல அமைப்பின் சார்பில் முதலாம் ஆண்டு சிறப்பு கருத்தரங்க கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கம் அமைப்பின் செயலாளர் தனுஷ் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகளான சுனில், நிஷா, தமிழிசை வேந்தன், சங்கீதா, சாதிக், ராம் பிரதாப், தீபக் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் சமூக நலம், சட்ட விழிப்புணர்வு மற்றும்பொதுமக்களின்உரிமைகள்தொடர்பாகசிறப்புரையாற்றினர்.இதனைத் தொடர்ந்து, அமைப்பின் செயலாளர் தனுஷ் கருத்தரங்கின் நோக்கம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான சட்ட விழிப்புணர்வின் அவசியம் குறித்து விரிவாக விளக்கமளித்தார். மேலும், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள், அரசின் நலத்திட்டங்கள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், அவற்றிற்கு சட்டரீதியான தீர்வுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த முதலாம் ஆண்டு சிறப்பு கருத்தரங்கம் பயனுள்ள கலந்துரையாடல்களுடன் இனிதே நிறைவு பெற்றது. கோவை மாவட்டம் புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் D