அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்துஆடுகிறது…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூராம் படி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் இவர் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளராக பணி செய்து வருகிறார் இவர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களை மணி கணக்கில் காத்திருக்க வைத்து பொதுமக்களை அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் மேலும் பத்திரப்பதிவு செய்யும் பொது மக்களிடம் நேரடியாக கமிஷன் வாங்காமல் பத்திர எழுத்தர்களிடம் பத்திரப்பதிவுக்கான கமிஷனை அவர்களையே வாங்க செய்து வினோத முறையில் கொள்ளையடித்து வருகிறார் மேலும் டாக்குமெண்ட் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வில்லங்கமான பத்திர பதிவுக்கான நபர்களை உள் அறையில் அழைத்து அவர்களுடன் பத்திரப்பதிவு செய்வதற்கான கமிஷன் தொகையைப் பேசி வாங்கிக் கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இவர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்